செய்திகள்

திருவான்மியூரில் போதைப் பொருள் பதுக்கல்: 2 பேர் கைது

Makkal Kural Official

சென்னை, அக். 27–

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படையினர் மற்றும் திருவான்மியூர் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஒருங்கிணைந்து திருவான்மியூர், காமராஜர் நகர் அருகே கண்காணித்து, மாத்திரைகள் கஞ்சா ஆயில் மற்றும் கஞ்சா ஆகிய போதைப்பொருட்களை மறைத்து வைத்திருந்த சாந்தனு (39 என்பவரை கைது செய்தனர். மேலும் சாந்தனுக்கு கஞ்சா ஆயில் சப்ளை செய்த பிராங்ளின் (39) என்பவரையும் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 20 போதை மாத்திரைகள், 1 மில்லி கஞ்சா ஆயில், 1.8 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள், 2 எடை இயந்திரங்கள் மற்றும் 1 கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கைது செய்யப்பட்ட சாந்தனு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், பிராங்ளின் கட்டுமான நிறுவனம் நடத்தி வருவதும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *