செய்திகள்

திருவண்ணாமலையில் உலக சாதனையாக 1500 பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற பரத தீபம் நிகழ்ச்சி

Makkal Kural Official

திருவண்ணாமலை நவ. 25-–

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி அருகிலுள்ள சந்தைமேடு மைதானத்தில் பரணி தீபத்தை வரவேற்கும் வகையில் உலக சாதனை நிகழ்வாக பரத தீபம் என்ற தலைப்பில் பரத நாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.

இதில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட பரத நாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டனர். இதில் அகல்விளக்கு, மலை, சிவசிவ என்ற வடிவில் பரத நாட்டிய கலைஞர்கள் நின்றபடி2 பாடல்களுக்கு சுமார் 30 நிமிடம் பரத நாட்டியம் ஆடி உலக சாதனை புரிந்தனர்.

இதனை செவன்த் சென்ஸ் உலக சாதனை பதிவு நிறுவனர் பாலசுப்பிரமணி சக்திவேல், தலைமை ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் ஆகியோர் மூலம் பதிவு செய்யப்பட்டு இதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சி.என்.அண்ணாதுரை எம்.பி, திரைப்பட நடிகைகள் தீபா, பிரியங்கா, ரோபோ சங்கர் மக்கள் நண்பர்கள் குழு மாவட்ட தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு உலக சாதனை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பரத நாட்டிய கலைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினர். இதில் பரத நாட்டிய கலைஞர்கள், பெற்றோர்கள் ஆன்மீக பிரமுகர்கள் உள்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *