செய்திகள்

திருமங்கலத்தில் கார் மோதியதில் பைக்கில் சென்ற மாணவர் பலி

Makkal Kural Official

சென்னை, ஜூலை 29–

திருமங்கலத்தில் கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர் பலியானார்.

அயனாவரத்தைச் சேர்ந்த அபிஷேக் (20), நித்தின் சாய் (19) ஆகியோர் தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் இன்று மோட்டார் சைக்கிளில் சென்னை திருமங்கலம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை அபிஷேக் ஓட்டியுள்ளார்.

பின்னால் நித்தின் சாய் அமர்ந்திருந்தார். அவர்கள் 2 பேரும் திருமங்கலம் பகுதியில் வந்த போது, மோட்டார் சைக்கிள் மீது கார் ஒன்று வேகமாக மோதியுள்ளது. இதில் 2 பேரும் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் நித்தின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அபிஷேக் படுகாயம் அடைந்தார்.

அவர்கள் மீது மோதிய காரில் வந்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். படுகாயம் அடைந்த மாணவன் அபிஷேக் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திட்டமிட்டு விபத்து ஏற்படுத்தி மாணவன் கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *