செய்திகள்

திருப்போரூர் சூளேரி காட்டுக்குப்பம் பகுதியில் கடலில் மூழ்கி உயிரிழந்த 3 பேர் குடும்பத்துக்கு ரூ.9 லட்சம் நிவாரணம்: ஸ்டாலின் அறிவிப்பு

Makkal Kural Official

சென்னை, அக்.3-

திருப்போரூர் சூளேரி காட்டுக்குப்பம் பகுதியில் கடலில் மூழ்கி உயிரிழந்த 3 பேர் குடும்பத்துக்கு ரூ.9 லட்சம் நிவாரணம் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தாலுகா சூளேரி காட்டுக்குப்பம் பகுதியில் கடலில் மூழ்கி உயிரிழந்த பெரம்பூர் சக்கரபாணி தோட்டத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 36), அவரது மகள்கள் கார்த்திகா (17), துளசி (16) எதிர்பாராதவிதமாக கடலில் மூழ்கி உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு குடும்பத்துக்கு ரூ.9 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *