திருப்போரூர், ஜன. 4:
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இள்ளலூர் முதல் நிலை ஊராட்சியில் தி.மு.க.வின் காஞ்சி வடக்கு மாவட்டம் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட பாகம் எண் 127, 128, 129ல் இள்ளலூர், ஈச்சங்காடு, பெரியார் நகர் ஆகிய பகுதிகளுக்கான ‘என் வாக்கு சாவடி வெற்றி வாக்கு சாவடி’ என்ற தலைப்பில் மாபெரும் தெருமுனை பொதுக்கூட்டம், கிளைக்கழக செயலாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் இள்ளலூர் கிளைக் கழகச் செயலாளர் எஸ்.ஜெயசேகரன் (எ)ராஜா ஏற்பட்டில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.ஆர்.எல். இதயவர்மன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கிளை கழக செயலாளர்கள், பாக நிலை முகவர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர் பொதுமக்கள் ஏன் மீண்டும் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து எடுத்துரைத்து பொறுப்பாளர்களுக்கு தேர்தல் பை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்வில் திருப்போரூர் தொகுதி பொறுப்பாளர் எஸ்.எம்.கே. அண்ணாதுரை, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி.சி. அன்புச்செழியன், திருப்போரூர் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் வெண்பேடு ரமேஷ், பொறுப்பு குழு உறுப்பினர் நெல்லிக்குப்பம் கெஜராஜன், கிளைக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
![]()





