திருப்பத்தூரில் நடைபெற்ற தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு சிறுபான்மையினர் இனத்தை சார்ந்த 2,981 பயனாளிகளுக்கு ரூ.22.51 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் சா.மு.நாசர் பேசுகையில், முதலமைச்சர் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவராக சொ.ஜோ அருண்.சே.ச. நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம், 38 மாவட்டங்களின் கள ஆய்வு அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில் சிறுபான்மையினர் நலன்கள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் அடங்கியுள்ளன. முதலமைச்சர் சிறுபான்மையினர் மக்களுக்கு அறங்காவலராக இருந்து காத்து வருகிறார். அதனால் முதலமைச்சரை மீண்டும் ஆட்சிப்பொறுப்பில் அமர வைத்து சிறுபான்மையினர் மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றார்.
இவ்விழாவிற்கு, மாவட்ட கலெக்டர் க.சிவசௌந்திரவல்லி வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண்.சே.ச. திட்ட விளக்கவுரை ஆற்றினார். சிறுபான்மையினர் நல இயக்ககம் ஆணையர் மு.ஆசியா மரியம், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.நாராயணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சட்டமன்ற உறுப்பினர்கள் க.தேவராஜி (ஜோலாா்பேட்டை), அ.நல்லதம்பி (திருப்பத்தூா்), அ.செ.வில்வநாதன் (ஆம்புா்), ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத்தலைவர் எம்.எம்.அப்துல்குத்தூஸ் (எ) இறையன்பன் குத்தூஸ் நன்றியுரை ஆற்றினார்.
இந்நிகழ்வில், மகளிர் திட்டம், திட்ட இயக்குநர் விஜயகுமாரி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை, தோட்டக்கலை துணை இயக்குநர் தீபா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் .கதிா்சங்கா், மாவட்ட சமூக நல அலுவலர் சுமதி, திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் வரதராஜன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கஸ்தூரி, திருப்பத்தூர் நகரமன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ், ஒன்றிய குழுத்தலைவர்கள் திருமதி திருமுருகன் (கந்திலி), சத்யா சதிஷ்குமாா் (ஜோலாா்பேட்டை), சங்கீதா பாரி (ஆலங்காயம்), விஜயா அருணாச்சலம் (திருப்பத்தூர்), சிறுபான்மையினர் நலத்திட்ட சிறப்பு குழு உறுப்பினர்கள் தருமபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி இல்லத்தந்தை பிரவீன் பீட்டர், முதல்வர் தா.மரிய ஆண்டனி ராஜ், திருப்பத்தூர் சிஎஸ்ஐ குருசேகர குழு தலைவர் ப.சிம்சன், வேலூர் சத்துவாச்சாரி, ஹதாயத்துல் இஸ்லாம் டிரஸ்ட் மஸ்ஜித், தலைமை இமாம், எஸ்.ஜமாலுதீன் உமரி, ஜெயின் சமணகுரு ப்ரிய வர்சஜன ஸ்ரீஜி, ஜெயின் சமணகுரு மிதஜன ஸ்ரீஜி, தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை தலைமைப் பிக்கு, பந்தே புத்த பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
![]()





