செய்திகள்

திருச்சி காவலர் குடியிருப்பில் ஒருவர் வெட்டிக் கொலை

Makkal Kural Official

திருச்சி, நவ. 10–

திருச்சி பீமநகர் மார்சிங் பேட்டை காவலர் குடியிருப்பு பகுதியில் பட்டப்பகதில் இளைஞரை 5 பேர் கும்பல் ஓட ஓட வெட்டி படுகொலை செய்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.

திருச்சி பீம நகர், கீழத்தெருவை சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (26). இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. இவர் தனியார் கம்பெனி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல இன்று காலை வேலைக்கு செல்வதற்காக திருச்சி பீமா நகர் பழைய தபால் நிலைய சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்திசையில் இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் தாமரை செல்வன் இருசக்கர வாகனத்தின் மீது மோதி உள்ளனர்.

இதனால் தாமரை செல்வன் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது நான்கு பேரும் பயங்கர ஆயுதங்களை கையில் வைத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உயிர் பயத்தில் அலறியடி ஓடிய அவர் அங்கிருந்து போலீஸ் குடியிருப்புக்குள் நுழைந்து தில்லை நகரில் பணிபுரியும் காவலர் செல்வராஜ் வீடு திறந்து இருந்ததால் அந்த வீட்டிற்குள் நுழைந்து கிரைண்டர் பக்கத்தில் போய் ஒளிந்து கொண்டுள்ளார். ஆனாலும் அந்த கும்பல் விடாமல் வீட்டுக்குள் நுழைந்து எஸ்எஸ்ஐ செல்வராஜ் மற்றும் காவலர் குடும்பத்தின் கண்முன்னே தாமரை செல்வனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

வீட்டுக்குள் சென்று வெட்டினர்

இதனை கண்ட காவலர் குடும்பத்தினர் அலறி கூச்சலிட்டுள்ளனர். இதனை பார்த்த அங்கிருந்த காவலர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினர் கொலையாளிகளை தாக்கியுள்ளனர். ஆனால் அவர்கள் கையில் ஆயுதங்கள் இருந்ததால் அனைவரும் தூரத்தில் இருந்தே தாக்கியுள்ளனர். அப்போது கொலையாளிகள் 4 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் ஒருவர் பிடிப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாலக்கரை போலீசார் விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட தாமரைச் செல்வன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ள நிலையில், மாநகரில் பள்ளிகள் அதிகம் உள்ள பகுதியில் குறிப்பாக காவலர் குடியிருப்பு உள்ளேயே புகுந்து ஒருவர் வெட்டி படுகொலை நடந்திருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *