செய்திகள்

தியாகி பார்த்தசாரதி பிறந்தநாள் விழாவில் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்

Makkal Kural Official

சென்னை,டிச. 3:

தமிழ்நாடு சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் நல கூட்டமைப்பு சார்பில் சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் மறைந்த தியாகி டி.பார்த்தசாரதி பிறந்தநாள் விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. விழாவிற்கு, தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஞானவேல் வரவேற்பு உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் சேம நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு 100 பேருக்கு வேஷ்டி, சேலை, சட்டை, டிபன் பாக்ஸ், வாட்டர் கேன், மதிய உணவு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

தியாகிகள் ஜோதி கண்ணன், வரதன் பொன்னம்பலம், ஹாரிஸ், கதர் வெங்கடேசன், வெங்கடசாய், கரூர் ராதாகிருஷ்ணன், வீ.மேகநாதன், ராஜேந்திரபாபு, பண்ருட்டி நிசார் அகமது, பேபி, சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில், காங்கிரஸ் மாவட்ட தலைவர் சிவ ராஜசேகரன், சர்க்கிள் தலைவர்கள் கராத்தே ஆர்.செல்வம், ஏ.ஜி.மணி மற்றும் டேவிட், கே.கே.முருகன், காந்தியம் வெங்கடேசன், லட்சுமி ராஜாராம், ராஜாராம், வினோத் குமார், சி.சின்னைய்யா, ரிச்சர்ட், ரோஸ் மேரி, மதுரை கதிரேசன், சரோஜா, கடலூர் மகாலட்சுமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *