செய்திகள்

தலைவர் ஜி.வி. சம்பத் தலைமையில் வேலூர் நறுவீ மருத்துவமனையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் சமத்துவ பொங்கல் விழா

Makkal Kural Official

சென்னை, ஜன. 17–

பொங்கல் திருநாளை யொட்டி வேலூர் நறுவீ மருத்துவமனையில் பொங்கல் திருவிழா சமத்துவ பொங்கலாக கொண்டாடப்பட்டது. மருத்துவமனை நிறுவனர் மற்றும் தலைவர் ஜி.வி. சம்பத் தலைமையில், துணைத் தலைவர் அனிதா சம்பத், பொது மேலாளர் நிதின் சம்பத் மற்றும் அபிராமி நிதின் ஆகியோர் பொங்கல் பானைகளில் பால், அரிசி, வெல்லம் மற்றும் முந்திரி, திராட்சை உள்ளிட்டவை இட்டு இந்த சமத்துவ பொங்கலை தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய கலைகள் மற்றும் விளையாட்டுகளான கும்மியடித்தல், உறியடித்தில், சிலம்பம், கயிறு இழுக்கும் போட்டி, கோணிப்பை ஓட்ட பந்தயம், கரும்பு கடிக்கும் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜி.வி. சம்பத் பரிசுகள் வழங்கினார். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள், எருது விடும் திருவிழா, மாடுபிடி திருவிழா உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் ஆண், பெண் என்ற பாகுபாடின்றி பெருமளவில் பங்கேற்று தமிழா்களின் வீர விளையாட்டுகளை உலகம் முழுவதும் பரைசாற்றி வருகிறன்றனா். சமத்துவ பொங்கல் திருவிழாவானது சாதி, மத பேதமின்றி அனைத்து தரப்பினரும் எவ்வித பாகுபாடின்றி இத்திருவிழாவை வண்ணமயமாக கொண்டாடி மகிழ்வது தொன்று தொட்டு நடந்து வருகிறது என்று மகிழ்ச்சியோடு கூறினார். உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இருந்து சிகிச்சைக்காக வந்துள்ள நோயாளிகளி மற்றும் அவரது குடும்பத்தினரும் இணைந்து பொங்கல் வாழ்த்தை தெரிவித்துக் கொண்டார்.

இவ்விழாவில் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் ஜேக்கப் ஜோஸ், முதன்மை நிதி அலுவலர் வெங்கட்ரங்கம், தலைமை இயக்குதல் அலுவலர் சரவணன் ராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *