சென்னை, செப். 24–
சென்னை தரமணி பகுதியில் ஹெராயின் போதைப் பொருள் வைத்திருந்த வடமாநில ஆசாமிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தரமணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் குழுவினர் தரமணி தபால் நிலையம் எதிரில் கண்காணித்தபோது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 நபர்களை விசாரணை செய்து, சோதனை செய்தபோது, அவர்கள் ஹெராயின் என்ற போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது
அதன்பேரில், தரமணி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, சட்டவிரோதமாக ஹெராயின் போதைப்பொருள் வைத்திருந்த திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ஷாகிம் மியா, ஆசிப் மிர்தா ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2.8 கிராம் ஹெராயின் குப்பிகள் மற்றும் பை பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் மேற்படி ஹெராயின் போதைப்பொருளை திரிபுரா மாநிலத்திலிருந்து வாங்கிவந்து சென்னையில் விற்பனை செய்து வந்ததும், ஷாகிம் சென்னையில் தனியார் நிறுவனத்தில் அலுவலக உதவியாளராகவும், ஆசிப் மிர்தா ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
![]()





