சென்னை, ஜன. 25–
தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் 3 பேருக்கு சிறப்புமிக்க ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினம் முன்னிட்டு சீரமைப்பில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கான பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வீரச்செயல் புரிந்த 121 பேருக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 89 பேருக்கு ஜனாதிபதி பதக்கம், 664 பேருக்கு சிறப்பான பணிக்கான பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதக்கம், செயல்பாடு, சாதனைகள் மற்றும் நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் துறை கண்காணிப்பாளர் குமரவேலு, துணை ஆணையர் அன்வர் பாஷா, ஐஜி மகேஸ்வரிக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், சிறப்பாக பணியாற்றிய தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த 21 அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் தகைசால் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, டிஎஸ்பி தேவராஜன், கமாண்டன்ட் மணிவர்மன், உதவி ஆணையர் ஜான், கூடுதல் ஆணையர் அமுல்தாஸூக்கு மெச்சத்தக்க பணிக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஎஸ்பி சீனிவாசன், ஆய்வாளர்கள் விஜய், கிருஷ்ணமூர்த்தி, ஜானகி, காளீஸ்வரி, இலக்குமணன், ரகுநாதன், மோகனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.காவல் ஆய்வாளர்கள் பாண்டி முத்துலட்சுமி, செந்தில் குமார், ஆனந்தி, சந்திரா, உதவி ஆய்வாளர் முருகனுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறைத்துறையில் உதவி ஜெயிலர்கள் பொன் பகவத் சிங், செல்வகுமார், சிவகாமி, ஊர்க்காவல் படையில் ஏர்டியா கமாண்டர் ஆனந்த், கம்பெனி கமாண்டர் நடராஜன், தீயணைப்புறையில் அதிகாரிகள் ஆண்டவராஜ், சுரேஷ்குமார், தீயணைப்பு வீரர் இளங்கோவன் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்படுகிறது.
![]()





