செய்திகள்

தமிழக பண்பாட்டை உலகம் முழுவதும் பரப்பிய பெரியபுராணம்

Makkal Kural Official

சென்னை, ஜூலை 26–

சேக்​கிழார் ஆராய்ச்சி மையம் சார்​பில் 33-ம் ஆண்டு தெய்வ சேக்​கிழார் விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. பல்வேறு ஆதீன கர்த்​தர்​கள் பங்​கேற்​றனர்.

சேக்​கிழார் ஆராய்ச்சி மையம், ஸ்ரீராமச்​சந்​திரா மருத்​து​வம் மற்​றும் ஆராய்ச்சி பல்​கலைக்​கழகம் சார்​பில் 33-ம் ஆண்டு தெய்வ சேக்​கிழார் விழா சென்னை திரு​வான்​மியூர் ராமச்​சந்​திரா கன்​வென்​ஷன் மையத்​தில் நடந்து வரு​கிறது. 2-ம் நாள் விழா நேற்று நடை​பெற்றது.

இந்நிகழ்ச்​சி​யில் தரு​மபுரம் ஆதீனம் 27வது குரு​மகா சந்நிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்​பந்த பரமாச்​சா​ரிய சுவாமிகளின் மணி விழா நடை​பெற்​றது. தொடர்ந்​து, தருமை ஆதீன புல​வர் சி.அருணைவடி வேல் எழு​திய ‘தென்றமிழ் பயன்’ நூல் வெளி​யிடப்​பட்​டது. நூலின் முதல் பிர​தியை தரு​மபுரம் ஆதீனம் வெளி​யிட, திருக்​கயிலாய பரம்​பரை திரு​வண்​ணா​மலை ஆதீனம் 46-வது குரு​மகா சந்நி​தானம் குன்​றக்​குடி பொன்​னம்பல அடிகளார் பெற்​றுக்​கொண்​டார்.

நிகழ்ச்​சி​யில் தரு​மபுர ஆதீனம் தலை​மையேற்று அருளாசி வழங்கி பேசி​ய​தாவது:–

சேக்​கிழார் நமக்கு கொடுத்த பெரிய கொடை, பண்​பாட்டு பெட்​டகம் பெரியபு​ராணம். நாயன்​மார்​கள் ஒவ்​வொரு​வரும் தனித்​தனி தொண்​டு​களை செய்​துள்ளனர். தொண்​டுக்கு தடங்​கலோ, இடையூறோ வரும் சூழலில், உயிரை மாய்த்​துக் கொள்​வார்​களே தவிர, பின்​வாங்​கியது இல்​லை. அதனால்​தான் பெரிய​வர்​களாக உயர்ந்தனர். அந்த புராண​மும் ‘பெரிய புராணம்’ என பெயர் பெற்​றது.

பட்​டிதொட்​டிதோறும் சென்று நாயன்​மார்​களின் வரலாற்றை காலத்​தோடு தொகுத்து ஒரு நூலை கொடுக்​கும் சீரிய பணியை சேக்​கிழார் பெரு​மான் செய்​துள்​ளார். பெரியபுராணம் இல்​லா​விட்​டால், தமிழகத்​தின் பண்​பாடு இன்று உலக அளவில் தெரிந்​திருக்​காது.

இவ்​வாறு அவர் பேசி​னார்.

தணி​கைமணி ராவ்​பகதூர் வ.சு.செங்​கல்​வ​ராயரின் ‘சி​வாலய தேவார ஒளிநெறி மற்​றும் கட்​டுரைகள் – 15 நூல்​களின்’ ஆய்வரங்கமும் நடை​பெற்​றது. நிகழ்ச்​சி​யில், பெருங்குளம் செங்​கோல் மடத்​தின் 103-வது ஆதீனம் சிவப்​பிர​காச தேசிக சத்தியஞான சுவாமிகள், திண்​டுக்​கல் சிவபுரம் ஆதீனம் திரு​நாவுக்​கரசு தேசிக பரமாச்​சா​ரிய சுவாமிகள், சேக்​கிழார் ஆராய்ச்சிமைய தலை​வர் நீதிபதி எஸ்​. ஜெகதீசன், செய​லா​ளர் சிவால​யம் ஜெ.மோகன், தஞ்சை தமிழ் பல்​கலைக்​கழக முன்​னாள் துணைவேந்​தர் இ.சுந்தரமூர்த்​தி, தமிழ் தொல்​லியல் அறிஞர் சித்ரா கணப​தி, தருமை ஆதீன புல​வர்​கள் அருணை பாலறா​வாயன், தெ.​முரு​க​சாமி உள்​ளிட்​ட பலர் கலந்​து கொண்​டனர்​.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *