செய்திகள்

தமிழக சட்டசபை ஜனவரி 20-ந் தேதி கூடுகிறது: கவர்னர் உரை நிகழ்த்துகிறார்

Makkal Kural Official

சென்னை,டிச. 26–

ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், 2026ம் ஆண்டு புத்தாண்டில் முதல் சட்டசபை கூட்டம் ஜனவரி 20ந் தேதி நடக்க இருக்கிறது. இந்த கூட்டத்தில், கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்ற இருக்கிறார்.

இதுதொடர்பாக, சபாநாயகர் அப்பாவு இன்று தலைமைச்செயலகத்தில் நிருபர்களிடம் பேசுகையில்,

“2026-ம் ஆண்டு தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஜனவரி 20-ந் தேதி கூடுகிறது. அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு கூடும் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று தமிழக அரசின் உரையை வாசிப்பார். நாங்கள் எந்த மரபையும் மாற்ற மாட்டோம். கவர்னர் சட்டசபையின் மாண்பை காப்பாற்றுவார் என்று நம்புகிறோம். தமிழ்நாடு சட்டசபை கூட்டம் மரபுகளுடன் நடைபெறும் என்றார்.

கவர்னர் உரையை தொடர்ந்து கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு எடுக்கும் என்றார்.

4 நாட்கள்…

கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜனவரி 21-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என்று தெரிகிறது.

இதனிடையே தி.மு.க. அரசின் ஆட்சிக்காலம் அடுத்த ஆண்டு (2026) மே மாதத்தில் முடிவடைய இருப்பதால், பிப்ரவரி மாதம் 2-வது வாரத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை மீண்டும் கூடும் என்று தெரிகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *