செய்திகள்

தமிழக அரசின் பாராட்டு விழா: ராஜாவை தாலாட்டும் தென்றல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

Makkal Kural Official

சென்னை, செப்.11-

“ராஜாவைத் தாலாட்டும் தென்றல்” பாராட்டு விழா இசையின் அரசனுக்கு மட்டுமல்ல, அவரை வியக்கும் உலகில் உள்ள அத்தனை இசை ரசிகர்களுக்குமான பாராட்டு விழா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் வருகிற 13-ந்தேதி பாராட்டு விழா நடத்தப்படுகிறது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடக்கும் இந்த விழாவில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று இளையராஜாவை வாழ்த்தி பேசுகிறார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் திரையுலகத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-

“ராஜாவைத் தாலாட்டும் தென்றல்” – நம் பாராட்டு விழா. இது இசையின் அரசனுக்கு மட்டுமல்ல, அவரை வியக்கும் உலகில் உள்ள அத்தனை இசை ரசிகர்களுக்குமான பாராட்டு விழா.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *