செய்திகள்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

Makkal Kural Official

சிதம்பரம், ஜூலை 16–

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறினார்.

சிதம்பரத்தில் அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா சொல்லவில்லை: எங்கள் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்றுதான் அமித்ஷா சொல்கிறார். அமித்ஷா சொல்வதை திரிக்க கூடாது. எங்கள் கூட்டணியில் பாஜக உள்ளது. இன்னும் சில கட்சிகள் உள்ளன. அதிமுக, பாஜக, கூட்டணியை பொறுத்தவரை கூட்டணி ஆட்சி கிடையாது. எங்கள் கூட்டணியை பொறுத்தவரை நான் சொல்வது தான்.

பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது.

எனக்கு விவசாயம் தொழில் தான் உள்ளது. எனக்கென கம்பெனி எல்லாம் கிடையாது. மக்கள் பிரச்சனைக்காக தான் டெல்லி செல்வோம். 2001-ல் பா.ஜ.க.வுடன் தான் தி.மு.க. கூட்டணி வைத்தது. அப்போது ஏன் இவ்வாறு பேசவில்லை. பா.ஜ.க.வுடன் கூட்டணி என்று அறிவித்ததால் முதலமைச்சருக்கு பயம். அரசு ஊழியர்கள் அரசுக்காக அரசியல்வாதியாக மாறிவிடக்கூடாது. ஆட்சியில் பங்கு வேண்டும் என பாமக கூறியதாக கேட்கிறீர்கள். பாமக கூட்டணிக்கு வந்தால் பார்க்கலாம். பா.ம.க.வில் நடக்கும் உட்கட்சி பிரச்சனைகளில் நாங்கள் தலையிட முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

எடப்பாடி பழனிசாமியிடம், உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், விளம்பர மாடல் ஆட்சி என கூறினார். ஓ.பன்னீர்செல்வம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு காலம் கடந்துவிட்டதாக பதில் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *