செய்திகள்

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்:சவரன் ரூ.75 ஆயிரத்தை தாண்டியது

Makkal Kural Official

சென்னை, ஜூலை 23–

சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.75,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கியக் காரணிகளாக உள்ளன. அதனடிப்படையில், ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

அந்த வகையில் நேற்று முன்தினம் 22 காரட் ஆபரண தங்கம் சவரன் 73,440 ரூபாய்க்கும் விற்பனையான நிலையில் நேற்று அதிரடியாக உயர்ந்தது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 105 ரூபாய் உயர்ந்து, 9285 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 840 ரூபாய் அதிகரித்து, 74,280 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 95 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,380க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை புதிய உச்சமாக ரூ. 75 ஆயிரத்தை கடந்தது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிகரித்துள்ளது, நகை பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.129-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,29,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *