சென்னை, செப். 20- உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் வர்த்தக போரால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது.
இந்த சூழலில் தங்கம் விலை கடந்த 16ந்தேதி ஒரு சவரன் ரூ.82 ஆயிரத்தை தாண்டி இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை
தொட்டது. அதன் பிறகும் விலை உயருமோ என நினைத்த நேரத்தில், கடந்த சில நாட்களாக சற்று குறைந்து காணப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.10ம், சவரனுக்கு ரூ.80ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 230க்கும், ஒரு சவரன் ரூ.81 ஆயிரத்து 840க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை ரூ.82 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உச்சத்தை எட்டி உள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து, ஒரு சவரன் ரூ,82,320 க்கு விற்பனையாகிறது.
![]()





