சென்னை, நவ.6–
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.90,000-க்கு விற்பனையாகிறது. கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று உயர்வை சந்தித்து உள்ளது.
சர்வதேச நிலவரங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கம் விலை ரூ.98 ஆயிரத்தை தொட்டது. அதன்பின்னர் இறக்கத்தை கண்டது.
இந்த நிலையில் சென்னையில் தங்கம் விலை கடந்த 4–ந்தேதி சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.90,000-க்கு விற்பனையானது. தொடர்ந்து தங்கம் விலை நேற்று மீண்டும் குறைந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.11,180-க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.89,440-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்தது. அதன்படி கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.11,250-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.90,000-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.164-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,000 உயர்ந்து ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 குறைந்த நிலையில், இன்று உயர்ந்திருப்பது நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
![]()





