சென்னை, நவ. 1–
சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால் நம் நாட்டில் தங்கம் விலையில் உயர்ந்து வருகிறது.
சென்னையில் நேற்று முன்தினம் காலை தங்கம் விலை கிராமுக்கு 225 ரூபாய் குறைந்து 11,100 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,800 ரூபாய் சரிவடைந்து 88,800 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. மாலை தங்கம் விலை கிராமுக்கு 200 ரூபாய் உயர்ந்து ரூ.11,300ம், சவரனுக்கு, ரூ.1,600 அதிகரித்து, 90,400 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று தங்கம் விலையில் மாற்றமில்லை.
இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அந்த வகையில் 22 காரட் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,310க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.166க்கு விற்பனையாகிறது.
![]()




