சென்னை, அக். 29–
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் நேற்று ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் இறங்கிய நிலையில் இன்று சவரனுக்கு ரூ.1080 அதிகரித்து மீண்டும் ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்தை நெருங்கியது.–
கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை பெரும்பாலான நாட்களில் உயர்ந்து வந்தது. கடந்த 17ம் தேதி ஒரு சவரன் ரூ.97,600 ஆக உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. ஓரிரு நாட்களில் சவரன் ரூ.1 லட்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென விலை குறைந்து. இதற்கிடையில், சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கம் வாங்குவதை குறைத்ததால், தங்கம் விலை இறங்கியது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் தங்கம் கிராம், 11,450 ரூபாய்க்கும், சவரன், 91,600 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு 150 ரூபாய் குறைந்து, 11,300 ரூபாய்க்கும், சவரனுக்கு, 1,200 ரூபாய் சரிவடைந்து 90,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று மாலை மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு 225 ரூபாய் குறைந்து, 11,075 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 1,800 ரூபாய் சரிவடைந்து 88,600 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 3,000 ரூபாய் குறைந்தது.
இந்த நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று 22 காரட் ஆபரண தங்கம் ரூ.1,080 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 89,680க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ.11,210க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ஒரு கிராம் ரூ.166க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1080 அதிகரித்திருப்பது நகைப்பிரியர்களுக்கு மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
![]()





