செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரிப்பு: ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்துக்கு விற்பனை

Makkal Kural Official

சென்னை, அக். 25–

சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரித்து ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்த வருகிறது. கடந்த 17-ம் தேதி அதிகபட்சமாக ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.12,200-க்கும், ஒரு சவரன் ரூ.97,600-க்கும் விற்பனையானது. அதன் பிறகு சிறிய அளவில் குறையத் தொடங்கியது. நேற்று முன்தினம் ஆபரண தங்கம் கிராம் 11,500 ரூபாய்க்கும், சவரன் 92,000 ரூபாய்க்கும் விற்பனையானது.

நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து, 11,540 ரூபாய்க்கும், சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து 92,320 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று மாலையில் தங்கம் விலை கிராமுக்கு 140 ரூபாய் குறைந்து 11,400 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,120 ரூபாய் சரிவடைந்து 91,200 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்நிலையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,500க்கும், சவரனுக்கு ரூ.800 அதிகரித்து ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. நேற்றைய விலையான ஒரு கிராம் ரூ.170ம், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,70,000-க்கும் என்ற அளவிலேயே இன்றும் விற்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *