சென்னை, ஜன. 5–
சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
பாதுகாப்பு கருதி, பெரிய முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளி கொள்முதலில் அதிகளவில் முதலீடு செய்கின்றனர். இதனால் சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை உயர்ந்து வருகிறது.
கடந்த 3–ந்தேதி காலையில் தங்கம் விலை சவரனுக்கு 480 ரூபாய் சரிந்து காணப்பட்ட நிலையில், மாலையில் ரூ.640 அதிகரித்தது. ஒரு சவரன் ஒரு லட்சத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 80 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 12 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து ஆயிரத்து 440 ரூபாய்க்கும், கிராமுக்கு 80 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 12 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 8 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், கிலோவுக்கு ரூ.8 ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி 2.65 லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
![]()





