செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரிப்பு

Makkal Kural Official

சென்னை, நவ.3–

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.90,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச நிலவரங்களால் நம் நாட்டில் தங்கம் விலையில் கிடுகிடுவென உயர்ந்துக் கொண்டே செல்கிறது.

சென்னையில் நேற்று முன் தினம் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,480க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஞாயிறு என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை.

வார தொடக்க முதல்நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.90,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11.350க்கு விற்பனை ஆகிறது.

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. இன்று கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.168க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.2 ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 68 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *