செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: வெள்ளி கிலோவுக்கு ரூ.8 ஆயிரம் அதிகரிப்பு

Makkal Kural Official

சென்னை, டிச. 10:

சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் 96 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ. 8 ஆயிரம் உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்​திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்படை​யில், தங்​கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​படுகி​றது.இந்த வாரத்தின் தொடக்க நாளான கடந்த 8ம் தேதி தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், கிராமுக்கு 12 ஆயிரத்து 40 ரூபாய்க்கும், சவரனுக்கு 96 ஆயிரத்து 320 ரூபாய்க்கும் விற்பனையாகி வந்தது.

நேற்று (9–ந்தேதி) சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 96 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 12 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 199 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்துள்ளது ஒரு சவரன் 96 ஆயிரத்து 240 ரூபாய்க்கும், ஒரு கிராமுக்கு 30 ரூபாய் அதிகரித்து 12 ஆயிரத்து 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேவேளையில் வெள்ளி விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. கிலோவுக்கு 8 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 2 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.8 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.207க்கு விற்பனை ஆகிறது.

தங்கம் விலை இந்த ஆண்டு இறுதிக்குள் சவரன் ரூ.1 லட்சத்தை எட்டும் என்று கணிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.96 ஆயிரம் வரை நெருங்கியுள்ளது. தங்கத்துடன், வெள்ளி விலையும் வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வருவது நடுத்தர வர்க்க மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *