செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு ஒரு சவரன் ரூ.94,160

Makkal Kural Official

சென்னை, நவ. 27–

சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.94,160க்கு விற்பனை ஆகிறது.

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 640 உயர்ந்து, நீண்ட நாள்களுக்கு பிறகு ஒரு சவரன் மீண்டும் ரூ. 94 ஆயிரத்தை கடந்து ரூ. 94,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை சவரனுக்கு ரூ. 240 குறைந்து, ஒரு சவரன் ரூ.94,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.30 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,770-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 4 உயர்ந்து, ரூ. 180-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,80,000-க்கும் விற்கப்படுகிறது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *