சென்னை, ஜன. 19:
சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,360 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,07,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோவுக்கு ரூ.8 ஆயிரம் அதிகரித்து, ஒரு கிலோ ரூ.3 லட்சத்து 18 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை கடந்த மாதம் (டிசம்பர்) 15-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டியது. அதன் பின்னர் விலை குறைந்த நிலையில் அதே மாதம் 22-ந்தேதியில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தில் பயணித்தது.
கடந்த சனிக்கிழமை சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,06,240-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.50 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.13,280-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை.
இந்நிலையில் இன்று தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,360 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,07,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.170 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.13,450-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையை பொறுத்தவரையில் நேற்று முன் தினம் வெள்ளி கிலோவுக்கு ரூ.4,000 அதிகரித்து, ரூ.3,10,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ. 8,000 அதிகரித்து, ரூ.3,18,000-க்கும், கிராமுக்கு ரூ.8அதிகரித்து. ஒரு கிராம் ரூ.318-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
![]()





