செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 சரிவு; ஒரு சவரன் ரூ.91,200

Makkal Kural Official

சென்னை: 18

 சென்னையில் இன்று (நவ.,18) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ஒரு சவரன் ரூ.91,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 சரிவை கண்டுள்ளது.

சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை (நவ.,15) ஆபரண தங்கம் கிராம் 11,550 ரூபாய்க்கும், சவரன் 92,400 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 175 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை தங்கம் சந்தைக்கு விடுமுறை.

அன்று, முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின. நேற்று (நவ., 17) தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, 11,540 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 80 ரூபாய் சரிவடைந்து, 92,320 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து, 173 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (நவ.,18) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ஒரு சவரன் ரூ.91,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.145 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,400க்கு விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து, ஒரு கிராம் ரூ.170க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 சரிவை கண்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *