சென்னை, நவ. 17:
தங்கம் விலை இன்று குறைந்ததையடுத்து ஒரு சவரன் ரூ.92,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) 17ந்தேதி ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 200க்கும், ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுதான் இதுவரை இல்லாத தங்கம் விலை உச்சமாக பார்க்கப்பட்டது. அதன் பின்னர் விலை அதிகரிக்கும் என சொல்லப்பட்ட நிலையில், விலை குறையத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் அதாவது கடந்த மாதம் 28ந்தேதி ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. அதனையடுத்து தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் நிலையும் நீடித்து வந்தது.
தங்கம் விலை நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.190 குறைந்து ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 550க்கும், சவரனுக்கு ரூ.1,520 குறைந்து, ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 400க்கும் விற்பனை செய்யப்படட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், தங்கம் விலையில் மாற்றமில்லை.
இந்நிலையில் இன்றும் தங்கம் விலை சரிந்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 540-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2-ம், கிலோவுக்கு ரூ. 2 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.173-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 73 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
![]()





