செய்திகள்

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,720 குறைந்தது: சவரன் ரூ.1,13,600க்கு விற்பனை

Makkal Kural Official

சென்னை, ஜன. 22–

சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,720 குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 600க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த 13ந் தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தை கடந்த நிலையில், நேற்று முன்தினம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தையும் தாண்டிவிட்டது. நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.350-ம், சவரனுக்கு ரூ.2,800-ம் அதிகரித்திருந்த நிலையில், பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.165-ம், சவரனுக்கு ரூ.1,320-ம் என ஒரே நாளில் கிராமுக்கு ரூ.515-ம், சவரனுக்கு ரூ.4,120-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,415-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 320க்கும் விற்பனை ஆனது. கடந்த 3 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.1,135-ம், சவரனுக்கு ரூ.9 ஆயிரத்து 80ம் உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,720 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும், கிராமுக்கு ரூ.215 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி நேற்று கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.345-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.

இன்று தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி இன்று ரூ. 5,000 குறைந்து, ரூ.3,40,000-க்கும், கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.340-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *