செய்திகள்

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.800 உயர்வு .

Makkal Kural Official

சென்னை, ஆக. 23–

சென்​னை​யில் ஆபரண தங்​கத்​தின் விலை இன்று சவரனுக்கு ரூ.800 உயர்ந்​துள்ளது. இதேபோல வெள்ளி விலையும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

தங்கம் விலை சர்வதேச அளவிலான பொருளாதாரம் மற்றும் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்தது.

சென்​னை​யில் 22 காரட் ஆபரணத் தங்​கத்​தின் விலை இன்று ஒரு கிராம் ரூ.100 உயர்ந்து ரூ.9,315-க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.74,520-க்கும் விற்பனை ஆகிறது. 24 காரட் சுத்த தங்​கம் சவரனுக்கு ரூ.81,288க்கு விற்பனை ஆகிறது.

இதே​போல வெள்ளி கிரா​முக்கு ரூ.2 உயர்ந்து ரூ.130-க்​கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,000 உயர்ந்து ரூ.1,30,000-க்​கும் விற்பனை ஆகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *