சென்னை, ஜன. 23–
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,600 என உயர்ந்துள்ளது. இதேபோல வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலை போட்டி போட்டுக் கொண்டு உயர்ந்து வருகிறது.
கடந்த 20-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தையும், நேற்று முன்தினம் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தையும் கடந்திருந்தது. நேற்று விலை குறைந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்துக்கு கீழ் வந்திருந்தது. தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் நேற்று குறைந்து காணப்பட்டது. கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து ஒரு கிராம் ரூ.340-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளி ரூ.3.60 லட்சம்
இன்று காலை தங்கம் சவரனுக்கு ரூ. 3,600-ம், வெள்ளி கிலோவுக்கு ரூ. 20,000-ம் அதிகரித்து ள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ. 14,650-க்கும், ஒரு சவரன் ரூ. 1,17,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல், வெள்ளி ஒரு கிராம் ரூ. 360-க்கும், ஒரு கிலோ ரூ. 3,60,000-க்கும் விற்பனையாகி வருகின்றது.
இந்த வாரத்தில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ. 10,960-ம், வெள்ளி கிலோவுக்கு ரூ. 50,000-ம் அதிரடியாக அதிகரித்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![]()





