செய்திகள்

தங்கம் சவரனுக்கு ரூ.3,360 குறைந்தது: வெள்ளி விலையும் சரிந்தது

Makkal Kural Official

சென்னை, டிச. 30:

தொடர்ந்து ஏற்றம் கண்டு அதிர்ச்சி அளித்து வந்த தங்கம் விலை இன்று ஆறுதல் அளிக்கும் வகையில் குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.3,360 குறைந்து விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கணிசமாகக் குறைந்துள்ளது.

சர்​வ​தேச பொருளா​தார சூழல் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்படை​யில் தங்கத்தின் விலை நிர்​ண​யிக்​கப்​படுகி​றது. அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால் தங்​கம் விலை தொடர்ந்து உயர்ந்​து வருகிறது.

அந்த வகையில் கடந்த 15ம் தேதி 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.1,00,120 என வரலாறு காணாத உச்சம் தொட்டு விற்பனையானது. பின்னர் 28–ந்தேதி ரூ. 1,04,800 என்ற மற்றுமொரு உச்சத்தைத் தொட்டது.

இந்த நிலையில் இன்று சென்னையில் 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.420 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,600-க்கும், சவரனுக்கு ரூ.3,360 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,800-க்கும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 23 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 258 ரூபாய்க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 58 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *