செய்திகள்

தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைவு: ரூ.96,160க்கு விற்பனை

Makkal Kural Official

சென்னை, டிச. 4–

சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. இதனால், ஒரு சவரன் ரூ. 96,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி (ஒரு சவரன் ரூ.97,600) புதிய உச்சத்தை தொட்டது. பின்னர் விலை குறையத் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக தங்கம் விலை மீண்டும் உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 40-க்கும், ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்து 320-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி கிராமுக்கு ரூ.20-ம், சவரனுக்கு ரூ.160-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 60-க்கும், ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்து 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,020-க்கும், சவரன் ரூ.96,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூபாய் ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.200-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்த்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *