செய்திகள்

தங்கம் சவரனுக்கு ரூ.1600 அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.93,760

Makkal Kural Official

சென்னை, நவ. 25–

சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1600 அதிகரித்து ஒரு சவரன் ரூ.93,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த மாதம் (அக்டோபர்) 17ந்தேதி ஒரு சவரன் ரூ.97,600 என்ற உச்சத்துக்கு சென்று, அதே மாதம் 28ந்தேதி ஒரு சவரன் ரூ.88,600 என்ற நிலைக்கும் வந்தது. அதன் பின்னரும், விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கிறது.

நேற்று தங்கம் விலை கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து, 11,520 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 880 ரூபாய் சரிவடைந்து, 92,160 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1600 அதிகரித்து ஒரு சவரன் ரூ.93,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,720க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.174க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *