சென்னை, செப். 23–
தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சமாக, ஒரு சவரன் ரூ.84 ஆயிரத்தை எட்டியுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கம் முதலே சா்வதேச போர் பதற்றம், உலக நாடுகளின் மீதான அமெரிக்க அரசின் பரஸ்பர வரி விதிப்பு, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் குறைப்பு அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு சா்வதேச காரணங்களால், தங்கத்தின் விலை உயர்வைக் கண்டு வருகிறது.
தங்கத்தின் மீதான முதலீடும் அதிகரித்து வருகிறது. இதனால், தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. கடந்த 16ம் தேதி சவரன் ரூ.82 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. அதைத்தொடர்ந்து சற்று ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது.
வாரத்தின் முதல் நாளான நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.10,360-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.82,880-க்கும் விற்பனையாது. தொடர்ந்து மாலை வர்த்தகம் நிறைவடையும் தருவாயில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. அதன்படி கிராமுக்கு மேலும் ரூ.70 உயர்ந்து ரூ.10,430-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.83,440-க்கும் விற்பனையானது. இதன்மூலம் ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்தது.
இந்த நிலையில் சென்னையில் ஆபரணத்தின் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 10,500-க்கும் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 84,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வரும் நாட்களில் தங்கத்தின் விலை உயரவே வாய்ப்பு உள்ளது என்று வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.
வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.149-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,000 உயர்ந்து ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
![]()





