சென்னை, ஜன. 26–
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.275 உயர்ந்து ரூ.15,025க்கும், சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,20,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம், வெள்ளி விலை தினமும் புதிய உச்சம் தொட்டு வருகிறது. அதிலும் கடந்த ஒரு வாரமாக இரண்டும் போட்டிப்போட்டுக் கொண்டு உயர்ந்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் காலை மற்றும் மாலை என இரண்டு நேரங்களிலும் விலை ஏற்றம் கண்டு வருகிறது.நேற்று முன்தினம் காலையில் கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் உயர்ந்தது. பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.130-ம், சவரனுக்கு ரூ.1,040-ம் அதிகரித்தது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,20,200-க்கு விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு ரூ.275 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,025-க்கு விற்பனையாகி வருகிறது.தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் தினமும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் வெள்ளி கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.375க்கு விற்பனையாகிறது. கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.3 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
![]()





