செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1000 குறைவு

Makkal Kural Official

சென்னை, ஜூலை 24–

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1000 குறைந்து ரூ.74,040 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஜூலை மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்திருப்பது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம்.

சவரனுக்கு ரூ.1000 குறைவு

ஜூலை 23 ந்தேதியான நேற்று, 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.9,380 க்கும், ஒரு சவரன் ரூ.75,040 க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ச்சியாக 7 நாட்களாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கம் விலை, இன்று அதிரடியாக குறைந்திருப்பது மக்களை மகிழ்ச்சியடையச்செய்துள்ளது.

அந்த வகையில் இன்று (ஜூலை 24) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.125 குறைந்து, ஒரு கிராம் ரூ.9,255 க்கும், சவரனுக்கு ரூ.1000 குறைந்து, ஒரு சவரன் ரூ.74,040 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.128க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,28,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *