சென்னை, ஜூலை 15–
22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 160-க்கு விற்பனை செய்யபடுகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை அண்மையில் ரூ.74 ஆயிரத்து 500 ஐ கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது.
சவரனுக்கு ரூ.80 குறைவு
இதனையடுத்து, தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில், நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73ஆயிரத்து 240-க்கும், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 155-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 160-க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 145-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து, ஒரு கிராம் ரூ.125-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
![]()





