செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.440 உயர்வு

Makkal Kural Official

சென்னை, ஜூலை 11–

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 440 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை அண்மையில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது.

இதனையடுத்து, தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில், நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்தும் ஒரு சவரன் ரூ.72ஆயிரத்து 160-க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.

சவரனுக்கு ரூ.440 உயர்வு

அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 55 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9,075 ரூபாய்க்கும் சவரனுக்கு 440 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 72 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 4 நாட்களாக அதே விலையில் நீடித்த வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி, வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 121 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *