செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்வு

Makkal Kural Official

சென்னை, ஜூலை 10–

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.72 ஆயிரத்து 160 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பொறுத்தவரையில் ஏற்ற இறக்கத்துடனேயே இருந்து வருகிறது.

இந்த ஆண்டு தொடங்கியது முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்து, கடந்த ஜூன் மாதத்தில் வரலாறு காணாத உச்சம் தொட்டது. ஆபரணத் தங்கம் விலை ரூ. 74 ஆயிரத்தை கடந்து புதிய வரலாறு படைத்தது.

சவரனுக்கு ரூ.160 உயர்வு

இதையடுத்து தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை, ஜூலை மாதம் தொடங்கியது முதல் ஏற்ற இறக்கத்தை கண்டது. நேற்று (ஜூலை 9) தங்கம் ஒரு கிராம் ரூ.9,000க்கும், ஒரு சவரன் ரூ.72,000 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று (ஜூலை 10) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,020க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமேதுமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.120க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *