சென்னை, ஜூலை 9–
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 9000 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து சவரன் ரூ.72 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை அண்மையில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது.
சவரனுக்கு ரூ.480 குறைவு
இதனையடுத்து, தங்கம் விலை கடந்த ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில், தங்கம் விலை நேற்று கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9,060 ரூபாய்க்கும் சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 72ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 9000 ரூபாய்க்கும் சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
![]()




