செய்திகள்

தங்கத்தின் விலை இன்று அதிரடியாக ரூ. 840 உயர்வு

Makkal Kural Official

சென்னை, ஜூலை 1–

தங்கம் விலை சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்து சவரன் 72 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை அண்மையில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது.

சவரனுக்கு ரூ.840 உயர்வு

இதனையடுத்து, தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த 5 நாட்களாக குறைந்த தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அந்த வகையில், நேற்று தங்கம் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 8 ஆயிரத்து 915 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 71 ஆயிரத்து 320 ரூபாய்க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 105 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9 ஆயிரத்து 20 ரூபாய்க்கும் சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 72 ஆயிரத்து 160 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *