செய்திகள்

டெல்லி – குருகிராம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை

Makkal Kural Official

புதுடெல்லி, செப் 27–

புதுடெல்லி குருகிராம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை தடுப்புச் சுவரில் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு, போலீசார் விரைந்தனர். இந்த விபத்தில் 3 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஒரு ஆண் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உத்தரபிரதேசத்திலிருந்து குருகிராமுக்கு, ஆறு பேர் காரில் ஏதோ ஒரு வேலைக்காக வந்திருந்த போது அதிகாலை 4.30 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது. ”தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த தடுப்புச்சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது.

இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை” என போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். கார் டிரைவர் மது அருந்தி இருந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *