செய்திகள்

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம்; உமரின் ரகசிய டைரிகள் சிக்கின

Makkal Kural Official

புதுடெல்லி, நவ. 13–

டெல்லி செங்கோட்டை அருகே மெட்ரோ ரெயில் நிலைய நுழைவு வாயில் பகுதியில், கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் உமர் எழுதியதாகக் கருதப்படும் டைரி மற்றும் நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அல பலாஹ் பல்கலைக்கழக டாக்டர்கள் தங்கியிருந்ததாகக் கூறப்படும் வளாகத்துக்குள் இருந்த அறையிலிருந்து சில நோட்டு புத்தகங்கள், டைரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்கள் பல்வேறு சதித்திட்டங்களை தீட்டியிருப்பதாக தெரிகிறது.

டாக்டர் முசாமில் தங்கியிருந்த அறை எண் 13 மற்றும் உமர் தங்கியிருந்த அறை எண் 4 ஆகியவற்றில் கைப்பற்றப்பட்ட நோட்டுகளில் பயங்கரவாத திட்டங்கள் தெளிவாக எழுதப்பட்டுள்ளன. அந்த நோட்டுப் புத்தகங்களில் சில குறியீட்டுச் சொற்களும், பெயர்கள், எண்கள், நவம்பர் 8 முதல் 12ம் தேதி வரையிலான தேதிகள் எழுதப்பட்டுள்ளது. இதைக் கொண்டு, மருத்துவர்கள் இந்த தேதிகளில் சில இடங்களில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.. முக்கியமாக டைரியில், ஆபரேஷன் என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் எழுதப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.அந்த டைரியில் மட்டும் குறைந்தது 25 – 30 பெயர்கள் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலானவர்கள் ஜம்மு – காஷ்மீர், முஸாமில் மற்றும் உமரின் சொந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், ஃபரிதாபாத் மற்றும் அதனை ஒட்டியுள்ளப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும், இதன் மூலம், வெள்ளை கோட் பயங்கரவாத மாடலின் நெட்வொர்க் பற்றி விசாரணை அதிகாரிகளுக்கு ஒரு தெளிவு கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது..அல் – பலாஹ் மருத்துவமனையின் கம்பவுண்டர் உள்பட அனைத்து ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பரிதாபாத் பல்கலைக்கழகத்தின் மருத்துவர் முஸாமில் கடந்த மாதம் அக்.30ஆம் தேதி கைது செய்யப்படுகிறார், அவரது கைதைத் தொடர்ந்து, முக்கிய குற்றவாளி உமர் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறியிருக்கிறார். மீண்டும் அவர் பல்கலைக்கழகத்துக்குத் திரும்பவில்லை. நவ. 10 தில்லியில் தாக்குதல் நடத்தியிருக்கிறார். எனவே, கடந்த 10 நாள்களும் அவர் எங்கு தங்கியிருந்தார் என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *