செய்திகள்

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம்: உமரின் வீடு வெடி வைத்து தகர்ப்பு

Makkal Kural Official

புல்வாமா, நவ. 14–

செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு காரணமான டாக்டர் உமர் நபியின் வீட்டை புல்வாமாவில் பாதுகாப்பு படையினர் வெடி வைத்து தகர்த்தனர்.

முன்னதாக பஹல்காம் தாக்குதலுக்கு தொடர்புடையவர்களின் வீடுகளையும் பாதுகாப்புப் படையினர் தரைமட்டமாக்கியது குறிப்பிடத்தக்கது.

டெல்லி செங்​கோட்டை அருகே கடந்த 10–ந்தேதி மாலை 6.52 மணிக்கு ஹூண்​டாய் ஐ20 கார் ஒன்று பயங்கர சத்​தத்​துடன் வெடித்து சிதறியது. இதில் அந்த காரை ஓட்டி வந்​தவர் உட்பட 13 பேர் உயி​ரிழந்​தனர். 20-க்​கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்​தனர். இந்த சம்​பவம் நாடு முழு​வதும் அதிர்வலைகளை ஏற்​படுத்தியது.

இது தொடர்​பான விசா​ரணை​யில் வெடிபொருளு​டன் கூடிய அந்த காரை ஜம்மு காஷ்மீரின் புல்​வாமா பகுதியை சேர்ந்த டாக்டர் உமர் முகமது நபி ஓட்டி வந்​தது தெரிய​வந்​தது. வெடித்த காரில் இருந்து சேகரிக்கப்பட்ட உடற்பாகங்கள் மற்றும் உமரின் தாயாரிடம் சேகரிக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரியை பகுப்பாய்வு செய்ததில் அந்த இரண்டும் 100 சதவீதம் ஒத்துப்போவது உறுதியானது. இதனடிப்படையில் காரை டாக்டர் உமர் தான் ஓட்டி வந்தார் என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை புல்வாமாவில் உள்ள டாக்டர் உமர் நபியின் வீட்டை பாதுகாப்பு படையினர் வெடி வைத்து தகர்த்தனர். இதற்கு ஐஇடி வெடிபொருட்களை பாதுகாப்பு படையினர் பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

3 டாக்டர்கள்

உமரின் உறவினர்கள்

டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் போலீசார் தீவிர சோதனை நடத்தியதில் அங்கு 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 3 டாக்டர்கள் உமர் நபியின் உறவினர்கள். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை மற்றும் கைது நடவடிக்கைகளை நடந்து வருகிறத.

டெல்லி கார் குண்​டு​வெடிப்​பில் தொடர்​புடைய டாக்டர்கள் உமர் நபி, முஜம்​மில், ஷாகின் ஆகியோர் திட்​டமிட்டு இந்த சதி செயலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மூவரும் சுவிட்​சர்​லாந்தின் ‘திரீமா’ செயலியைப் பயன்​படுத்தி சதி திட்​டம் தொடர்​பாக கலந்​துரை​யாடி உள்​ளனர்.

ரூ. 26 லட்சம்

நிதி திரட்டினர்

டெல்லியில் நடந்ததை போல கார் வெடிப்புச் சம்பவத்தை 4 இடங்களில் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருந்ததை போலீசார் கண்டறிந்து உள்ளனர். சுமார் 26 லட்சம் ரூபாயை இதற்காக அவர்கள் நிதியாக திரட்டி உள்ளதும் தெரிய வந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *