புதுடெல்லி, ஜூலை 16–
டெல்லியில் 5 பள்ளிகள் மற்றும் ஒரு கல்லூரிக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் டெல்லியில் 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
டெல்லியில் இன்று துவாரகாவில் உள்ள செயிண்ட் தாமஸ் பள்ளி, வசந்த்குஞ் பகுதியில் உள்ள வசந்த் வேலி பள்ளி, ஹவுஸ் காஸில் உள்ள மதர்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி, பஸ்சிம் விஹாரில் உள்ள ரிச்மண்ட் குளோபல் பள்ளி மற்றும் லோதி எஸ்டேட்டில் உள்ள சர்தார் படேல் வித்யாலயா ஆகிய பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்தப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து டெல்லி போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் அந்த பள்ளிகளுக்கு படை எடுத்தனர். இதுவரை சந்தேகப்படும் படியாக எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், மின்னஞ்சல் போலியாக இருக்கலாம் என்றும், தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். அதேபோல செயிண்ட் ஸ்டீபன் கல்லூரிக்கும் இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது. நூலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சலில் கூறப்பட்டதாக போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டது. அங்கும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 3 நாட்களில் டெல்லியில் 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
![]()





