டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
செய்திகள்

டெல்லியில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Makkal Kural Official

புதுடெல்லி, ஆக. 18–

டெல்லியில் உள்ள 2 பள்ளிகள் மற்றும் துவாராகாவில் உள்ள ஒரு கல்லூரிக்கு இன்று காலையில் ’தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரி வளாகத்திலிருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டு, அவர்களின் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு தடயவியல் நிபுணர்களுடன் மிரட்டல் வந்த பள்ளி, கல்லூரிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.தீவிர சோதனைக்குப் பின் மிரட்டல் வெறும் புரளி என்று தெரிய வந்துள்ளது.

ஒரு பள்ளிக்கு இன்று காலை வந்த தொலைபேசி அழைப்பில், பள்ளிக்குள் சக்திவாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மற்றொரு பள்ளிக்கும், கல்லூரிக்கும் மின்னஞ்சல் மூலமாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் அனுப்பியவர் யார், எங்கிருந்து மின்னஞ்சல் அனுப்புப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த மாதமும் இதேபோல் டெல்லியில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *