செய்திகள்

டெல்லியில் தேர்தல் ஆணையத்துக்குப் பேரணி ; ராகுல், பிரியங்கா கைது

Makkal Kural Official

புதுடெல்லி, ஆக. 11–

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில், இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திலிருந்து தலைமை தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற மோசடிகள் குறித்து கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரிய ஆதாரங்களுடன் வெளியிட்டிருந்தார்.

பாரதீய ஜனதா கட்சி (பா.ஜ.க.) அரசுடன் சேர்ந்துகொண்டு தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாகவும் கடும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணி நடத்த இந்தியா கூட்டணி கட்சியினர் போலீசாரிடம் அனுமதி கேட்டனர். ஆனால் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டது.

இருப்பினும் போலீசாரின் தடையை மீறி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து நிர்வாச்சன் சதானில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணியை தொடங்கினர்.

25 கட்சி எம்.பிக்கள்

இதில் காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ், தி.மு.க., ஆம் ஆத்மி, இடதுசாரிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் பிரிவு), சிவசேனா (யுபிடி) மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட 25 கட்சிகளை சேர்ந்த இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். தமிழக எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, துரை வைகோ, சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் பேரணியில் பங்கேற்றனர்.பேரணியில் ஆங்கிலம், இந்தி, தமிழ், வங்காளம், மராத்தி உள்ளிட்ட மொழிகளில் பீகாரில் நடைபெற்ற சிறப்பு வாக்காளர் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வாக்கு திருட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பதாகைகள் ஏந்திச் சென்றனர்.

எம்.பி.க்கள் பேரணியாகப் புறப்பட்ட நிலையில், டிரான்ஸ்போர்ட் பவன் அருகே அவர்களை போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த நிலையில் தடுப்புகள் மீது ஏறிச் செல்ல அகிலேஷ் யாதவ் மற்றும் தமிழக எம்பி ஜோதிமணி உள்ளிட்ட சில பெண் எம்.பி.க்கள் முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தரையில் அமர்ந்து

பிரியங்கா ஆர்ப்பாட்டம்

பேரணியாகப் புறப்பட்டவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் பிரியங்கா உள்பட ஏராளமான எம்.பி.க்கள் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்டனர். மேலும் பீகார் வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் செய்வதற்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

இதனையடுத்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பிரியங்கா, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்களை போலீசார் கைது செய்து பேருந்தில் அழைத்து சென்றனர்.

தூய்மையான வாக்காளர்

பட்டியல் தேவைஅப்போது செய்தியாளர்களுடன் பேசிய ராகுல் காந்தி, ”அவர்களால் எங்களிடம் பேச முடியாது என்பதுதான் உண்மை. உண்மை நாட்டு மக்கள் முன் உள்ளது. இந்த போராட்டம் அரசியல் சார்ந்தது அல்ல. அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்கானது. ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற அடிப்படைக்காக போராடுகிறோம். எங்களுக்கு தேவை சுத்தமான, தூய்மையான வாக்காளர் பட்டியல்” எனத் தெரிவித்தார்.

டெல்லி போலீஸ் அதிகாரி கூறியதாவது:–

பேரணி செல்ல அனுமதி இல்லாததால் எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையம் 30 எம்.பி.க்களை சந்திக்க அனுமதி அளித்திருக்கிறது. அவர்கள் பட்டியல் அளித்தால் 30 பேரை தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு அழைத்துச் செல்வோம். தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதனிடையே ராகுல் காந்தி நேற்று தனது எக்ஸ் வலை​தளப் பக்கத்​தில், “வாக்கு திருட்டு என்​பது ஒரு​வருக்கு ஒரு வாக்கு என்ற அடிப்​படை நோக்கத்​தின் மீது நடத்​தப்​படும் தாக்​குதலாகும். தெளிவான வாக்காளர் பட்​டியல் என்​பது​தான், நேர்​மை​யான சுதந்​திரமான தேர்​தலை உறுதி செய்​யும். தேர்​தல் ஆணை​யத்​திடம் நாங்கள் வைக்​கும் கோரிக்கை எல்​லாம் தெளி​வாக உள்​ளது. தேர்தல் ஆணை​யம் வெளிப்​படை​யாக செயல்பட வேண்​டும்.

புதிய இணையதளம்

செல்போன்

மின்​னணு வாக்​காளர் பட்​டியலை வெளி​யிட வேண்​டும். அப்​போது​தான் நாட்டு மக்​களும் அரசி​யல் கட்​சிகளும் அதை ஆய்வு செய்ய முடி​யும். எங்​களு​டைய இந்த கோரிக்​கையை வலி​யுறுத்தி பிரச்சாரம் தொடங்​கு​கிறோம். அதற்​காக ‘http://votechori.in/ecdemand’ என்ற புதிய இணை​யதளத்தை தொடங்கி வைக்​கிறோம். அத்​துடன் 96500 03420 என்ற செல்​போன் எண்​ணை​யும் வெளி​யிடு​கிறோம். இணையதளத்​தில் பொது​மக்​கள் தங்​கள் கருத்​துகளைக் கூறி, பிரச்சா​ரத்​தில் பங்​கேற்க வேண்​டும். செல்​போனில் மிஸ்டு கால் கொடுத்து பிரச்​சா​ரத்​தில் இணை​ய​லாம்.” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *