செய்திகள்

டி.ஜி. வைணவக் கல்லூரியில் முதல்வர் சந்தோஷ் பாபு தேசிய கொடி ஏற்றினார்

Makkal Kural Official

சென்னை, ஜன.26–

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரியில், 77-வது குடியரசு தின விழா இன்று மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. கல்லூரிச் செயலர் அசோக் குமார் முந்த்ராவின் வழிகாட்டுதலின்படி, 5-வது கம்பெனி என்.சி.சி. காலாட்படை மற்றும் 1 (டிஎன்) பட்டாலியன் என்.சி.சி ஆகியவை இணைந்து இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தன.

விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய கல்லூரி முதல்வர் சேது. சந்தோஷ் பாபு, மகாத்மா காந்தியின் அஹிம்சை கொள்கைகள் மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் வடிவமைத்த அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். நாட்டின் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதில் இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் என்பதை வலியுறுத்தினார்.

நமது கல்லூரி 60 ஆண்டுகால கல்விப் பயணத்தில் பல மைல்கற்களை எட்டியுள்ளது. இதற்குப் பேராசிரியர்களின் அர்ப்பணிப்பும், மாணவர்களின் ஒழுக்கமுமே முக்கியக் காரணம். குறிப்பாக, டெல்லி மற்றும் மாநில அளவிலான குடியரசு தின அணிவகுப்பில் (RD Parade) பங்கேற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்த என்.சி.சி. மற்றும் என்.எஸ்.எஸ். மாணவர்களைப் பாராட்டுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

மத்திய அரசின் ‘விக்சித் பாரத்’ தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப கல்லூரி அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி கண்டு வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பயன்படுத்தும் அதே வேளையில், நாட்டின் மீதான கடமைகளையும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார். நிலையான மேம்பாட்டு இலக்குகளை நோக்கிய கல்லூரியின் பயணத்தையும் அவர் வலியுறுத்தினார்.

கல்லூரியின் வளர்ச்சிக்கும், இது போன்ற தேசப்பற்று மிக்க நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கும் உறுதுணையாக இருந்து வரும் செயலர் அசோக் குமார் முந்த்ராமற்றும் நிர்வாகக் குழுவினருக்கும் நிறுவனம் தனது நன்றியைப் பதிவு செய்தது.

இந்த விழாவினை என்.சி.சி அதிகாரி பி. அருளரசன் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார். இதில் கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *