செய்திகள்

டி.ஜி. வைணவக் கல்லூரியில் தேசிய மாணவர் படை வீரர்களுக்கான 14–வது தேசிய கருத்தரங்கு முதல்வர் எஸ்.சந்தோஷ்பாபு துவக்கி வைத்தார்

Makkal Kural Official

சென்னை, டிச. 8–

சென்னை அரும்பாக்கம் டி.ஜி. வைணவக் கல்லூரியில் தேசிய மாணவர் படை வீரர்களுக்கான 14–வது தேசிய கருத்தரங்கை முதல்வர் எஸ்.சந்தோஷ்பாபு துவக்கி வைத்தார்.

துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரியின் தமிழ்நாடு தேசிய மாணவர் கவசப் படைப் பிரிவு –1″ தேசிய மாணவர் படை வீரர்களுக்கான தொழில் வாய்ப்புக்கான வழிகாட்டல் என்னும் பொருண்மையில் 14-வது தேசிய கருத்தரங்கத்தைச் சிறப்பாக நடத்தியது. தொடர்ச்சியாக பதினான்கு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியை, முன்னாள் இணை தேசிய மாணவர் படை அதிகாரியும் கல்லூரி முதல்வருமான சேது. சந்தோஷ் பாபு கனவு மெய்ப்படும் வகையில் தொடர்ச்சியாக வழிநடத்தி வருகிறார். அவரது உறுதியான ஆதரவும் தலைமையும் இந்தப் பயிற்சித் திட்டத்தின் முக்கிய இயக்க சக்தியாகத் திகழ்கின்றன. இந்த கருத்தரங்கிற்கு இணை தேசிய மாணவர் படை அதிகாரி பி. சுரேஷ் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினார்.

விழாவில் கல்லூரி முதல்வர் எஸ். சந்தோஷ் பாபு பேசுகையில், ஒழுக்கம், தலைமைத்திறன், நாட்டுப்பற்று என்பவற்றை வலியுறுத்தி, பாதுகாப்புத் துறை, குடிமைப் பணி மற்றும் வளர்ந்து வரும் தொழில்துறைகளில் மேன்மையை நோக்கிக் தேசிய மாணவர் படையினர் முன்னேற வேண்டும் என அவர் வலியுறுத்தினார். உயர்ந்த தரநிலைகளைப் பேணிக் கொண்டு, நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்காற்றும் வலுவான தேசிய மாணவர் படைப் பிரிவு ஒன்றை உருவாக்குவதே தனது இலக்கு எனவும் அவர் தெரிவித்தார்.

கர்னல் வாஷிம் அஹமர் பேசுகையில், இந்திய இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் உள்ள தொழில் வாய்ப்புகள் குறித்து கர்னல் வாஷிம் அஹமர் விரிவான உரை நிகழ்த்தினார். தனது பணிப்பயனையும் அனுபவத்தையும் பகிர்ந்து, சேர்க்கை பெறும் விதிமுறைகள், தேர்வு நடைமுறைகள் மற்றும் தேசிய மாணவர் படையினருக்கான சிறப்பு ஒதுக்கீட்டு வாய்ப்புகள் குறித்து தெளிவாக விளக்கினார். அவரது உரை பாதுகாப்புத் துறையில் சேரும் ஆர்வத்தை தேசிய மாணவர் படையினரிடம் மேலும் ஊக்குவித்தது என்றார்.

வருமான வரி ஆணையர் வி. நந்தகுமார், கன்ஜிரண்ட் சொல்யூஷன்ஸ் தனியார் நிறுவன பொது மேலாளர் இலக்கியா பி, இந்திய இராணுவ அதிகாரி கல்லோனல் அபிஜ் ராய், ஓய்வுபெற்ற காவல்துறைக் கண்காணிப்பாளர் எஸ். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

இந்த தேசிய கருத்தரங்கு, தேசிய மாணவர் படையினருக்கு தன்னம்பிக்கை, நோக்கம் மற்றும் தெளிவான தொழில் வழிகாட்டுதலை அளித்து, நாட்டின் எதிர்காலத் தூண்களாக உருவாகும் ஊக்கத்தை அவர்களுக்குக் கொடுத்த ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *